ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில், நள்ளிரவு 11.30 மணியிலிருந்து 12.30 மணிக்குள் மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இந்த நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இந்த பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே புயல் கரையைக் கடந்த பின்பும், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கைப் பதிவாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
விழுப்புரம்
ஆகிய 3 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அதி கனமழை பெய்ய வய்ப்பில்லை எனவும், எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கண்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
திருவள்ளூர்
வேலூர்
திருப்பத்தூர்
தர்மபுரி
சேலம்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
திருநெல்வேலி
தென்காசி
காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றிரவு வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
ராணிப்பேட்டை
கடலூர்
அரியலூர்
பெரம்பலூர்
திருச்சிராப்பள்ளி
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
சிவகங்கை
ராமநாதபுரம்
மதுரை
திண்டுக்கல்
புதுச்சேரி மாவட்டங்களில் இன்றிரவு வரை பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.