தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு நாளை (நவ. 29) அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் அதி கனமழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.