ஐரோப்பா கண்டத்தில் நடைபெறும் சாம்பியன் லீக் தொடரில் ராபர்ட் லெவண்டாவ்ஸ்கி புதிய சாதனையை படைத்துள்ளார்.
பார்சிலோனா அணியில் விளையாடிவரும் போலந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் லெவண்டாவ்ஸ்கி 100 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.
இதற்கு முன்பாக மெஸ்ஸி. ரொனால்டோ இந்த சாதனை நிகழ்த்தியிருந்தார்கள். தற்போது இருவரும் ஐரோப்பா கண்டத்தை தாண்டி மற்ற போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். அதனால், இவர்களின் சாதனை முறியடிக்க இது நல்லதொரு வாய்ப்பாக அமையும்.
125 போட்டிகளில் இந்த சாதனயை லெவண்டாவ்ஸ்கி படைத்துள்ளார். டோட்ர்முந்த், பெயிர்ன் முனிச், பார்சிலோனா ஆகிய அணிகளுக்காக இந்த கோல்களை அடித்துள்ளார்.
ப்ரெஸ்ட் அணிக்கு எதிரான் இந்தப் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். 3-0 என பார்சிலோனா அணி வென்றது.
இந்தத் தொடரில் பார்சிலோனா 34 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ரியல் மாட்ரிட் 30 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இருக்கின்றன.
ஐரோப்பா லீக்கில் அதிக கோல்கள் அடித்தவர்கள்
1. கிறிஸ்டியானோ ரொனால்டோ – 140 (183 போட்டிகளில்)
2. லயோனல் மெஸ்ஸி – 129 (163 போட்டிகளில்)
3. ராபர்ட் லெவண்டாவ்ஸ்கி – 101 (125 போட்டிகளில்)
4. கரீம் பெஞ்சமா – 90 (152 போட்டிகளில்)