டெல்லியில் வரும் 29-ந்தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரம் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்புவது தொடர்பாக இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அரியானா மற்றும் மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும், பீகார் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்தும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.