தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கடலூர் மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு பொன் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழாவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.23.93 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், விருத்தாசலம் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் மேல்புவனகிரி, கம்மாபுரம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றிற்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 12,100 பயனாளிகளுக்கு, 80 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணு பிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.