Wednesday, March 11, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்2024ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்ற இந்திய வீராங்கனை

2024ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்ற இந்திய வீராங்கனை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த ஒருநாள்,டெஸ்ட் , டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர் , வீரங்கனைகள் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அந்த வகையில் 2024-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்தது. அதன்படி, இந்திய நட்சத்திர பேட்டர் ஸ்மிர்தி மந்தன, இலங்கையின் சாமரி அட்டபட்டு, ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் மற்றும் தென்னாப்பிரிக்காவின் லாரா வால்வார்ட் ஆகியோர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 2024ம் ஆண்டுக்கான ஐசிசி-யின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக இந்திய வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா தேர்வு செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசியின் சிறந்த ஒருநாள் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை ஸ்மிர்தி மந்தனா வெல்வது இது இரண்டாவது முறையாகும்.

இடது கை வீராங்கனையான மந்தனா, 2024-ம் ஆண்டில் மட்டும் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் அடித்துள்ளார். இது ஒரு ஆண்டில் அவர் எடுத்த அதிக ரன்கள் ஆகும். அத்துடன், 2024-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் நான்கு சதங்களை மந்தனா அடித்தார். இது பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனையாகும்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments