Wednesday, March 18, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்2வது ஒருநாள் போட்டி பாகிஸ்தானை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்

2வது ஒருநாள் போட்டி பாகிஸ்தானை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. இந்நிலையில், பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி டிரினிடாடில் நடைபெற்றது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய பாகிஸ்தான் 37 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. ஹசன் நவாஸ் 36 ரன்னும், ஹுசைன் தலாத் 31 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து மழை காரணமாக ஆட்டம் பாதிப்பு அடைந்தது. வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீலஸ் 3 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 35 ஓவரில் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறஙகியது.

முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து தத்தளித்தது.6-வது விக்கெட்டுக்கு ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஜோடி இணைந்து அணியை பொறுப்புடன் விளையாடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ரோஸ்டன் சேஸ் 49 ரன்னும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 33.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது ரோஸ்டன் சேசுக்கு வழங்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments