நீதித்துறை அதிகாரிகள் 106 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த இடமாற்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்த இடமாற்றத்தில் மாவட்ட நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் நீதிமன்ற பதிவாளர்கள் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட நீதவான்களில் மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க, மஹர நீதவான் எச்.ஜி.ஜே.ஆர். பெரேரா, குருணாகல் நீதவான் என்.டி.பி. குணரத்ன, காலி நீதவான் ஐ.என்.என். குமாரகே மற்றும் பலபிட்டிய நீதவான் ஆர்.டி.ஜனக ஆகியோர் உள்ளடங்குவதாக நீதிச் சேவை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க >>>
இன்று நள்ளிரவுடன் சில உணவுகளின் விலை குறைக்கப்படும்
மன்னார் காற்றாலை கவனயீர்ப்பு போராட்டம் – ரவிகரன் எம்.பி பங்கேற்பு
மலையக ரயில் சேவை பாதிப்பு – தண்டவாள புனரமைப்பு ரயில் தடம் புரள்வு
குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது!
ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு – ஐரோப்பிய ஆணையம்
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்


