Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல்முனைவு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல்முனைவு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல்முனைவின் 85ஆம் நாளை முன்னிட்டு, நேற்று (24) மெசிடோ நிறுவனத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல், முன்னாள் மற்றும் இந்நாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், பின்வரும் தலைப்புகள் குறித்து ஆழமான விவாதங்கள் நடத்தப்பட்டன.

சமஷ்டி ஆட்சி முறைமை என்றால் என்ன?உலகத்தில் சமஸ்டி ஆட்சி முறைமையின் நடைமுறைகள், சமஸ்டி ஆட்சி முறைமையின் முக்கிய அம்சங்கள், சமஸ்டி ஆட்சி முறைமையின் வகைகள்,இலங்கைக்கு பொருத்தமான சமஷ்டி ஆட்சி முறைமை எது? இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறைமையை உருவாக்க நாம் எவ்வாறு பங்களிக்கலாம்? போன்றவை விவாதிக்கப்பட்டன

பங்கேற்பாளர்கள் தமது கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொண்டன ர்.

இக்கலந்துரையாடல் மூலம், வடக்கு மற்றும் கிழக்கின் மக்களுக்கு பொருத்தமான அரசியல் தீர்வை உருவாக்கும் நோக்கில் ஒருமித்த சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

(மன்னார் நிருபர்)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments