Wednesday, March 11, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்100 கோடியில் உருவாகும் 'நாகபந்தம்'

100 கோடியில் உருவாகும் ‘நாகபந்தம்’

அபிஷேக் பிக்சர்ஸ், நிக் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் பான் இந்தியா படம் ‘நாகபந்தம்’. இதில் விராட் கர்ணா நாயகனாக நடிக்கிறார், நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் நாயகிகளாக நடிக்கிறார்கள். ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ்.அவினாஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். அபிஷேக் நாமா இயக்குகிறார். அபே இசை அமைக்கிறார். சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜகந்நாதர் கோயில்களில் மறைந்துள்ள, பொக்கிஷங்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின் உத்வேகத்தில், ஆன்மீக மற்றும் சாகசக் கருப்பொருள்களுடன், ஸ்கிரிப்டை அபிஷேக் நாமா எழுதியுள்ளார். நாகபந்தம் இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோயில்களைச் சுற்றியுள்ள மர்மத்தை ஆராய்கிறது, இந்த புனித தளங்களைப் பாதுகாக்கும் நாகபந்தத்தின் பண்டைய சடங்குகளை மையமாகக் கொண்டு, இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 108 விஷ்ணு கோவில்களிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 100 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

108 விஷ்ணு கோவில்களில் உள்ள நாகங்களை ஒருங்கிணைத்தால் உலகையே அதிசயிக்கவைக்கும் ஒரு புதையல் ரகசியம் கிடைக்கும் என்பதுதான் படத்தின் ஒன் லைன். அதை ஹீரோ எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது திரைக்கதை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments