Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொலை குற்றச்சாட்டில் 10 பேருக்கு மரணதண்டனை!

கொலை குற்றச்சாட்டில் 10 பேருக்கு மரணதண்டனை!

இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் கடந்த 14 வருடங்களாக இடம்பெற்று வந்த கொலை வழக்கு மரண தண்டனை தீர்ப்புடன் முடிவுக்கு வந்துள்ளது.
எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற பிரதான நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எம்பிலிப்பிட்டிய – முல்லகஸ்யாய பகுதியில், 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதியன்று, பொதுமகன் ஒருவரை ஆயுதமொன்றினால் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த 10பேருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.

முன்னதாக, இந்த வழக்கில் 12 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், இரண்டு சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 10 குற்றவாளிகளும் தந்தை மற்றும் மகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments