Sunday, August 2, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

வியட்நாம் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற prestigous தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் வியட்நாமின் நியூயென் து லின் (Nguyen Thu Linh) என்பவரைத் தன்வி ஷர்மா எதிர்கொண்டார்.

போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தன்வி, நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் ஆட்டத்தை 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்திலும் தனது அதிரடியான ஆட்டத்தை நீடித்த அவர், மீண்டும் 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று நேர் செட்களில் போட்டியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தைபே ஓபன் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments