வின்னிபெக் நகரில் வார இறுதியில் இடம்பெற்ற இரு தனித்தனி வாகன விபத்துகளில் பாதசாரிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை எல்ம்வுட் (Elmwood) பகுதியில் உள்ள வாட் வீதி (Watt Street) மற்றும் லார்சன் அவென்யூ அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வின்னிபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று, சனிக்கிழமை காலை செயின்ட் ஜோன்ஸ் பார்க் (St. John’s Park) பகுதிக்கு அருகே உள்ள மெயின் வீதி (Main Street) மற்றும் மவுண்டன் அவென்யூ (Mountain Avenue) அருகே இடம்பெற்ற மற்றொரு விபத்தில் பாதசாரி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார். இந்த விபத்தின் போது சாரதி சம்பவ இடத்திலேயே தங்கியிருந்ததாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.
இரு விபத்துகள் தொடர்பிலும் போக்குவரத்துப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பான கண்காணிப்புக் காணொளி உள்ளிட்ட தகவல்களைக் கொண்டவர்கள் 204-986-7085 என்ற போக்குவரத்துப் பிரிவு இலக்கத்திற்கோ அல்லது 204-986-6178 என்ற பொலிஸ் தகவல் இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


