Sunday, March 15, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்விடுதலை 2' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

விடுதலை 2′ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.

இதில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் வருகிற 20-ந் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு விழா நடைபெற்றது.

இப்படத்தின், ‘தினம் தினமும்’ என்ற முதல் பாடல் வெளியாகி வைரலானது. இளையராஜா குரலில் வெளியான இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கிடையில் படக்குழு ‘விடுதலை 2’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது.

இந்த நிலையில், தணிக்கை குழு இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை முதல் பாகத்திற்கும் ‘ஏ’ சான்றிதழ் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments