Wednesday, March 11, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்விஜய்யின் இப்தார் நோன்பு திறப்பு குறித்து சீமான் பதில்

விஜய்யின் இப்தார் நோன்பு திறப்பு குறித்து சீமான் பதில்

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “புதிய கல்வி கொள்கையில் நாம் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இதனை ஏற்றுக் கொள்கிறோமா, எதிர்க்கிறோமா என தெளிவான முடிவெடுக்க வேண்டும். இல்லம் தேடி கல்வியை நாம் ஏற்றுக் கொண்டு இருக்கிறோம்.

முதலில் சமச்சீர் கல்வி என்று ஒன்றைக் கொண்டு வந்தார்கள், அதற்கு பெயர் சமச்சீர் பாடத் திட்டம், சமச்சீர் கல்வி கிடையாது. கிராமங்களில் வைத்து இருக்கும் மாணவர்களின் புத்தகமும் நகர்ப்புற மாணவர்கள் வைத்து இருக்கும் புத்தகமும் ஒன்றுதான், ஆனால், கல்வி அங்கு சமச்சீராக இல்லை.

நகர்ப்புறங்களில் படிப்பவனுக்கு குளிரூட்டப்பட்ட அறை, விளையாட்டு திடல் போன்றவைகள் எல்லாம் உள்ளது. ஆனால் கிராமப்புறத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு அந்த வசதிகள் எல்லாம் இருக்கிறதா?. சிற்றூர்களில் எல்லாம் மூன்றாம் தர ஆசிரியர்களைதான் பணி நியமனமே செய்கிறீர்கள். முதல் தர ஆசிரியர்களை நகர்ப்புற பள்ளிக்கூடங்களில் பணியமர்த்துகிறீர்கள். அவர்களெல்லாம் தனியார் பள்ளியை நோக்கி சொல்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.

கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “திமுகவுக்கான எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. இதில் முதன்மையான பங்கு என்னுடையதாக இருக்கும், நான் மட்டும் தனியாகத்தான் இருப்பேன். இந்த நாட்டு மக்களுக்கு ஒரு நோய் இருக்கிறது, கூட்டணி இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என கேட்கிறீர்கள். கொள்கை இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என யாரையும் கேட்பதில்லை, கொள்கை இல்லாமல் கூட்டணி இருந்தால் வென்று விடலாம் என்ற நிலையை வரவேற்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நடத்திய இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “எனக்கு நிறைய உறவுக்காரர்கள் இஸ்லாம் மதத்தில் இருக்கிறார்கள். நான் ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் கிடையாது. நான் மக்களின் உணவுக்கானவன் அல்ல அவர்களின் உரிமைக்கானவன்.

இதுபோன்று செய்வது விஜய்க்கு பிடித்து இருக்கிறது அதனால் செய்கிறார். அவர் சென்று வந்ததால் எந்த பாதிப்பும் இல்லை. நாட்டிற்கு மக்களுக்கும் இதனால் என்ன பிரச்சனை ? ஒன்றும் இல்லையே அதனால் அதைப் பற்றி பேச தேவை இல்லை என்றார். ந

இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை அண்ணா என்று அழைக்கிறார்களே என்ற கேள்விக்கு, எங்கள் கட்சியை எடுத்துக் கொண்டால் எங்களின் தலைவர் சிறியவர் பெரியவர் என பாராமல் அனைவரையும் தம்பி என அழைப்பார். இது போன்றவை எல்லாம் அன்பின் மிகுதியால் வரக்கூடிய சொல். இதற்கு வயசு எல்லாம் தேவையில்லை.

ஜெயலலிதா போன்றவர்களை அடி மனதில் இருந்து அம்மா என்று அழைத்தார்கள். அவர்கள் அரசியலுக்கு வரும்போது அவர்களை செல்வி என்று தான் அழைத்தார்கள், ஒரு காலகட்டத்தில் வயதாகும் பொழுது அவர்களை அம்மா என்று அழைக்க தொடங்கினார்கள். அதேபோல என்னை அப்பா என்று அழையுங்கள்.. தாத்தா என்று அழையுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை.

சீமான் ஆகிய எனக்கு ஞானத்தை போதித்த ஒவ்வொருவரும் அப்பா தான். முருகன் என என்னை பெற்றவரா? அப்பா முருகா ஞானபண்டிதா என்று அழைக்கிறோம் அல்லவா… அதெல்லாம் பாசத்தில் பக்தியினுடைய வெளிப்பாடாக எடுத்துக் கொள்வோம்.. அதுபோலத்தான் இதுவும் என்று கூறினார்.

மீனவர்களுக்காக தொடர் கைதை தடுக்க வேண்டும் என்று 22ஆம் தேதி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை வைத்து இருக்கிறோம். அதற்கு ஆதரவாக வலிமையான ஒரு குரல் வரும்போது அதை நாங்கள் ஆதரிக்க தான் செய்வோம். ஏற்றுக்கொள்வோம். மீனவர்களுக்கான உரிமை இங்கு இந்த இரண்டு கட்சிகள் இருக்கும் வரை கிடைக்காது, அதேபோல மேல் இருக்கும் காங்கிரசுக்கோ பாரதிய ஜனதாவுக்கோ தமிழ்நாட்டைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை” என்று அவர் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments