Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்விஜய்க்கு வி.சி.க. ஆதரவு: ஆதவ்விடம் கடிதம் கையளிப்பு!

விஜய்க்கு வி.சி.க. ஆதரவு: ஆதவ்விடம் கடிதம் கையளிப்பு!

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது.

சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி ஆதர் அர்ஜூனா ஒரு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதையடுத்து த.வெ.க.வுக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் திருமாவளவன் வழங்கியுள்ளார்.

திருமாவளவன் வழங்கிய ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனா காட்டினார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பார் என்றார். வி.சி.க. ஆதரவு தந்ததால் த.வெ.க.வின் பலம் 118ஆக உயர்ந்துள்ளது.

இக்கடிதத்தை பெற்ற ஆதவ் அர்ஜூனா த.வெ.க. தலைவர் விஜயிடம் வழங்குகிறார்.

வி.சி.க.வின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கும் த.வெ.க. தலைவர் விஜய், அதன் பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.

 

தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும், விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், ஒரு தொகுதியை இராஜினாமா செய்துவிட்டுத்தான் ஆட்சி அமைக்க முடியும்.

இதனால் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்களின் பலம் 107 ஆக குறையும்.

இந்த 107 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் சார்பில் 5 எம்.எல்.ஏ.க்கள், 2 கம்யூனிஸ்டுகள் சார்பில் 4 எம்.எல்.ஏ.க்கள் என 116 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் நேற்று விஜய் 3-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆதரவு கோரினார்.

இந்நிலையிலேயே பெரும்பான்யை பெருவதற்கு 2 உறுப்பினர்கள் தேவை என்ற அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் ஆதரவு கோரப்பட்டிருந்தது.

தற்போது அந்தக் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க த.வெ.கவுக்கு தற்போது 118 என்ற பெரும்பான்மை கிடைத்துள்ளது.

இதனை அடிப்படையாக வைத்து மீண்டும் ஆளுநரை சந்திப்பதற்கான நேரத்தை வழங்குமாறு த.வெ.க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அதற்கான சந்தர்ப்பத்தை ஆளுநர் வழங்குவாரா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

காரணம் இன்றிரவு அவர் கேரளா செல்லவிருப்பதால் விஜய்யை சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுமா என்பது சரியாக தெரியவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments