Wednesday, March 18, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ரூ.100 கோடி செலவில் ஆடம்பரமாக நடத்த திட்டம்!அமேசான் நிறுவனர் திருமணத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

ரூ.100 கோடி செலவில் ஆடம்பரமாக நடத்த திட்டம்!அமேசான் நிறுவனர் திருமணத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (வயது 61). பல பெரு நிறுவனங்களின் சொந்தக்காரான இவர், உலகின் 3-வது பெரிய பணக்காரர். இவரது தற்போதயை சொத்து மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி. தனது முதல் மனைவியான மெக்கன்சி ஸ்காட்டை 2020-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

தொடர்ந்து தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான லாரன் சான்சாஸை (55) காதலித்து வந்தார். இந்தநிலையில் தனது காதலியை கரம் பிடிக்க ஜெப் பெசோஸ் முடிவு செய்தார். இருவரின் திருமணம் இத்தாலியின் வெனிசில் வருகிற 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மூன்று நாட்கள் நடக்க உள்ளது.

ரூ.100 கோடி செலவில் மிக ஆடம்பரமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த திருமணத்துக்கு உலக பணக்காரர்கள் அனைவரும் அங்கு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வெனிசில் நட்சத்திர ஓட்டல்கள், படகு டாக்சிகள் ஆகியவை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அமேசான் நிறுவனர் திருமணத்துக்கு வெனிஸ் நகர மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த திருமணத்தால் தங்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனக்கூறி ஜெப் பெசோசுக்கு எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments