Thursday, March 12, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ரூ. 10 ஆயிரம் கோடி தந்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்கமாட்டோம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரூ. 10 ஆயிரம் கோடி தந்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்கமாட்டோம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழக்கினார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரூ. 1,285 கோடி மதிப்பிட்டீல் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஏற்கனவே முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

முதலீட்டாளர்களுக்கு முதல் முகவரியாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியின் நுழைவு வாயிலாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. செங்கல்பட்டு என்றாலே 1979ல் நடத்தப்பட்ட சுயமரியாதை மாநாடுதான் நியாபகம் வருகிறது.

இந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 2 ஆயிரம் கோடி கல்வி நிதியை தருவோம் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் திமிராக பேசுகிறார். தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை மொத்தமாக அழித்து ஒழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. நாம் அதை எதிர்க்கிறோம்.

கல்விக்குள் மாணவர்களை கொண்டுவர முயற்சி செய்யாமல், கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்வதற்கான அனைத்து செயல் திட்டங்களும் புதிய கல்விக்கொள்கையில் உள்ளது.

கல்வியை தனியார் மயமாக்குதல், பணக்காரர்களுக்கு மட்டுமே உயர்கல்வி என்ற நிலையை ஏற்படுத்துவது, கல்வியை மதவாதத்துடன் புகுத்துதல், சிறிய பிள்ளைகளுக்குகூட பொதுத்தேர்வு, கலை, அறிவியியல், பொறியியல் படிப்புகளுக்கு நீட் போன்று பொதுத்தேர்வு கல்வியில் மத்திய அரசின் அதிகார குவிப்பிற்கு வழிவகுக்கிறது.

இதை அனைத்தையும் பார்த்துதான் தேசிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று உறுதியாக கூறுகிறோம். ஆனால், தேசிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் கல்வி நிதி தரமாட்டோம் என்று மத்திரி தர்மேந்திர பிரதான் கூறுகிறார்.

2 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல 10 ஆயிரம் கோடி ரூபாய் தந்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்கமாட்டோம். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அநாகரீகமானவர்கள், அராஜகவாதிகள் என்று நாடாளுமன்றத்தில் நாவடக்கம் இல்லாமல் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார். ஆனால், பேசிய அரைமணிநேரத்தில் அவர் பேசியதை நமது தமிழ்நாட்டு எம்.பி.க்கள் திரும்பப்பெற வைத்துள்ளனர் ‘ என்றார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments