Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழ். மாவட்டத்தில் கனமழை! : 19,200 பேர் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் கனமழை! : 19,200 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 200 பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டி.என் சூரியராஜா தெரிவித்தார்.

தொடர் மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள் மற்றும் கரையோர பிரதேசங்களை அண்டி வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த சீரற்ற காலநிலை காரணமாக 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் அனர்த்த நிலை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை, நல்லூர், தெல்லிப்பழை , சங்கானை, காரைநகர், கோப்பாய், சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம், உடுவில், நெடுந்தீவு, கரவெட்டி, வேலணை, மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளில் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments