Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழ். சுழிபுரத்தில் கசிப்பு விற்றவர் கைது

யாழ். சுழிபுரத்தில் கசிப்பு விற்றவர் கைது

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 26 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒருபோத்தல் கசிப்பு வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments