Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி உயிரிழப்பு!

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ – கனேவல்பொல வீதியில் கோமரன்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது

கலென்பிந்துனுவெவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கலென்பிந்துனுவெவ, கோமரன்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடையவர் ஆவார்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments