Friday, March 20, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்மோகன் ஜி இயக்கும் திரௌபதி 2 படத்தின் முதல்காட்சி அறிவிப்பு

மோகன் ஜி இயக்கும் திரௌபதி 2 படத்தின் முதல்காட்சி அறிவிப்பு

2016 ஆம் ஆண்டு வெளியான “பழைய வண்ணாரபேட்டை” படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது. கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான “பகாசூரன்” திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. மோகன் ஜி அடுத்து இயக்கும் திரௌபதி 2 படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் முதல்காட்சி இன்று காலை 10.58 மணிக்கு வெளியிட இருப்பதாக பதாகை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments