Monday, October 26, 2026
spot_img
Homeகனடா செய்திகள்மெக்கில் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு சர்ச்சை!

மெக்கில் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு சர்ச்சை!

மொன்றியலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில், கொலைக் குற்றத்திற்காகத் தண்டனை பெற்ற ஜெஃப்ரி ஜார்ஜ் எவர்ட் மீண்டும் கல்வி கற்பது தொடர்பாக மாணவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

பெண் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே அவர் வகுப்புகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என ஒரு மாணவர் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, எவர்ட்டின் கல்வி மற்றும் மறுவாழ்வு வாய்ப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என மற்றொரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களின் பாதுகாப்பும் நலனும் முதன்மையானவை எனத் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments