Friday, March 13, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி

மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கவனிக்க வைத்தவர் பாலாஜி தரணிதரன். இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்தார். தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் சீதக்காதி படமும் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டை பெற்றது. இவர்கள் இப்போது மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைகின்றனர். இதனை இயக்குனர் அட்லி, அவரின் ‛ஏ பார் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. தற்போது இதற்கான அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கான உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக விஜய்சேதுபதி ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments