Friday, July 3, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்!

முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நலன்புரி நன்மைகள் சபையினால் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவுகள் இன்று (3) முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான இக்கொடுப்பனவின் முதற்கட்டத்தின் கீழ், தகுதிபெற்ற 621,761 பயனாளிகளுக்காக 3,108,805,000.00 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 76,139 முதியோர்களுக்காக 380,695,000.00 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதிகள் அனைத்தும் தகுதியான பயனாளிகளின் அஸ்வெசும வங்கி கணக்குகளில் நேரடியாக வைப்பில் இடப்படவுள்ளன.

அதன்படி, தமக்குரிய கொடுப்பனவுத் தொகையை பயனாளிகள் அனைவரும் இன்று முதல் தத்தமது அஸ்வெசும வங்கிச் கணக்குகளின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் (செயற்பாடுகள்) டி.எல். பி. ரிஷான் தர்மசேன தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments