Monday, November 9, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்முதலாம் டெஸ்ட் - இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி

முதலாம் டெஸ்ட் – இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (9) ஆரம்பமாகவுள்ளது.

 

ராவல்பிண்டி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

 

அதற்கமைய குறித்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடவுள்ளது.

 

இலங்கை நேரப்படி இந்தப் போட்டி முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

 

பாகிஸ்தான் அணியில் தையப் ஆரிஃப், தாஹா, அரஃபாத் மின்ஹாஸ் மற்றும் சாகிப் கான் ஆகிய நான்கு அறிமுக வீரர்கள்  இன்றைய தினம் களம் இறங்குகின்றனர்.

 

அதே வேளையில், இலங்கை அணி ஒரு முதன்மை சுழற்பந்து வீச்சாளர் கூட இல்லாமல் விளையாட முடிவு செய்துள்ளது .இது மிக அரிதான ஒரு நிகழ்வாக கருதப்படுகின்றது.

 

குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியில் பசிந்து சூரியபண்டார, லஹிரு உதார , தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சொனால் தினுஷ, மிலன் ரத்நாயக்க, லஹிரு குமார, அசித பெர்னாண்டோ  மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments