Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முட்டை விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாதாம்!

முட்டை விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாதாம்!

சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளபோதும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்தார்.

முட்டை விலை குறைவடைந்துள்ள நிலையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு செய்யாமல் இருப்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் முட்டை விலை காலநிலை போன்றது. இன்றுள்ள விலை நாளை இல்லை. நாளுக்கு நாள் மாற்றமடைகிறது.

15, 20 ரூபாவுக்கு இருந்த முட்டை 60, 70 ரூபாவரை விலை அதிகரித்தது. தற்போது மீண்டும் 25,30 ரூபாவரை விலை குறைந்துள்ளது.

இந்த விலை குறைப்பை அடிப்படையாகக்கொண்டு பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைக்க முடியாமல் இருக்கிறது.

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு மேற்கொள்வதற்கு நிச்சயமாக கோதுமை மா மற்றும் மாஜரின் விலை குறைவடையவேண்டும்.

கோதுமா விலை குறைப்பு தெரிந்தளவில் இரண்டு வருடங்களுக்கும் அதிக காலமாக இடம்பெறவில்லை. டொலரின் பெறுமதி 300, 400 ரூபாவுக்க இருக்கும்போது இருந்த விலையே தற்போதும் கோதுமை மா விலை இருந்து வருகிறது.

அதனால் இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனால். கோதுமை மா மற்றும் மாஜரின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் தற்போது கடைகளில் ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ கிராம் கேக், 700 ரூபாவரை குறைத்து விற்பனை செய்ய முடியும்.

அவ்வாறு இல்லாமல் முட்டை விலை குறைவடைந்தவுடன் பேக்கரி பொருட்களின் விலையில் மாற்றம் செய்ய எந்தவகையிலும் முடியாது என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments