Thursday, November 21, 2024
spot_img
Homeஇலங்கை செய்திகள்மீன்பிடித்துறை குறித்த இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஆறாவது அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் !

மீன்பிடித்துறை குறித்த இந்திய – இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஆறாவது அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் !

மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இருதரப்பினரதும் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விடயங்களாக காணப்படுவதால் அவற்றை மனிதாபிமான முறையில் கையாண்டு நிவர்த்தி செய்வதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென இந்திய – இலங்கை தரப்பினரும் இணங்கியுள்ளனர்.

அத்துடன் இரக்கம், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அணுகுமுறை மட்டுமே இருதரப்பு மீனவர்களாலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளுக்கு நீடித்த அடித்தளமொன்றினை உருவாக்குமெனவும் அவர்கள் இணங்கியிருந்தனர்.

மீன்பிடி விவகாரங்கள் குறித்த இந்திய – இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஆறாவது அமர்வு ஒக்டோபர் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

இந்த அமர்வில் கலந்துகொண்டிருந்த இந்திய தூதுக்குழுவுக்கு இந்திய அரசாங்கத்தின் மீன்பிடித்துறை செயலர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி தலைமை தாங்கியிருந்த அதேவேளை, மீன்பிடித் துறை, விலங்கு பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சு, வெளியுறவுத் துறை அமைச்சு, தமிழக அரசாங்கம், கடற்படை, கரையோரக் காவல் படை, மத்திய சமுத்திர மீன்வள ஆராய்ச்சி நிலையம் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரலாயம் ஆகியவற்றின் சிரேஸ்ட அதிகாரிகளும் இணைந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை இலங்கை தூதுக்குழுவுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தலைமைதாங்கியிருந்த அதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சு, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், கடற்படை, கரையோரக் காவல் படை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் சிரேஸ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

இந்த அமர்வின்போது மீனவர்கள் தொடர்பாகவும் மீன்பிடித்துறை குறித்தும் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக பரந்தளவான மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இருதரப்பினரதும் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விடயங்களாக காணப்படுவதால் அவற்றை மனிதாபிமான முறையில் கையாண்டு நிவர்த்தி செய்வதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.

அத்துடன் இரக்கம், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அணுகுமுறை மட்டுமே இருதரப்பு மீனவர்களாலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளுக்கு நீடித்த அடித்தளமொன்றினை உருவாக்குமெனவும் அவர்கள் இணங்கியிருந்தனர்.

இதேவேளை, இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் முற்கூட்டியே விடுதலை செய்யுமாறு இந்திய தரப்பினர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், இலங்கையில் இந்திய மீனவர்களும் அவர்களது படகுகளும் நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கப்பட்டு அதிகளவான தண்டப்பணம் விதிக்கப்படுகின்றமை அதிகரித்துள்ளமை தொடர்பாகச் சுட்டிக் காட்டியுள்ள இந்திய தரப்பு, மீனவர்கள் விவாகரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஏற்கனவெ காணப்படுகின்ற புரிந்துணர்வுகள் மற்றும் முறைமைகளைப் பின்பற்றவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தது.

இந்தியக் கடற்படை மற்றும் கரையோரக் காவல் படை அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் தற்போது காணப்படுகின்ற ஒத்துழைப்பினை சுட்டிக்காட்டி, கண்காணிப்பு மற்றும் ரோந்து, இருதரப்பு கடற்படையினர் இடையிலான நேரடி இணைப்புகள் மூலமாக கிரமமான தொடர்புகளை மேற்கொள்ளல், மற்றும் ஏனைய சகல செயற்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் மேம்பட்ட ஒத்துழைப்பினை தொடர இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர். அத்துடன் துரதிஷ்டவசமாக ஏற்பட்ட காயங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த சம்பவங்கள் அண்மையில் கடலில் இடம்பெற்றிருந்தமை தொடர்பாக கவனத்துக்கு கொண்டுவந்திருந்த இந்திய தரப்பு, பலத்தினை பயன்படுத்துவது அனைத்து சந்தர்ப்பங்களிலும் தவிர்க்கப்படவேண்டியதாகுமெனவும் கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், மீனவர்களின் விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக இரு நாடுகளினதும் மீனவ அமைப்புகளின் கூட்டத்தினை விரைவில் நடத்தவேண்டுமெனவும் இந்திய தரப்பினரால் வலியுறுத்தப்பட்டிருந்தது. மீனவர்கள் பிரச்சினைக்கு, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்கதும் நீண்டகாலம் நீடித்திருக்கக் கூடியதுமான தீர்வு ஒன்றினை எட்டுவது குறித்த விடயங்கள் தொடர்பாக பரந்த பேச்சுகளை முன்னெடுப்பதற்காக கிரமமாகவும் தொடர்ச்சியாகவும் சந்திப்புகளை மேற்கொள்ளவும் இருதரப்பும் இணங்கியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments