Monday, March 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை - CEB

அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை – CEB

மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை எனவும் இந்நிலை இவ்வாறே இருந்தால் இது வேலைநிறுத்தமாக தீவிரப்படுத்தப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க போராட்டத்தின் முதல் கட்டம் இந்த மாதம் 15 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை என்றால், சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் வேலைநிறுத்தமாக தீவிரப்படுத்தப்படும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்தா தெரிவித்தார்.

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments