Wednesday, March 18, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மாநிலங்களவை தேர்தல் – அதிமுகவினர் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தல் – அதிமுகவினர் வேட்புமனு தாக்கல்

தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களான ம.தி.மு.க.வைச் சேர்ந்த வைகோ, தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே அதற்கான தேர்தல், வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் தனபால் ஆகியோர், தங்களது வேட்பு மனுக்களை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். அதிமுகவினர் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உடன் இருந்தார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கேபி.முனுசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.

அதேபோல, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களான வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோரும் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments