Tuesday, March 17, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்; திமுக 4 பேர் பட்டியலை வெளியிட்டது

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்; திமுக 4 பேர் பட்டியலை வெளியிட்டது

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்கிறது.

இந்தநிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

தி.மு.க. வேட்பாளர்களாக 1. திரு. பி.வில்சன் பி.எஸ்சி, பி.எல்., 2. திரு. எஸ்.ஆர்.சிவலிங்கம் 3. ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன். மக்களவைத் தேர்தலின்போது செய்த உடன்பாடு அடிப்படையில் ம.நீ.ம.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments