Friday, March 20, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மதுரை சென்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

மதுரை சென்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க. மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த இருக்கிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 11.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்படுகிறார். மதியம் 1.05 மணிக்கு மதுரை வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் பெரியசாமி, நேரு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, சாத்துார் ராமச்சந்திரன், தியாகராஜன், எம்.பி., டி.ஆர்., பாலு, மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் அளித்த வேஷ்டி, சால்வையை மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments