பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வத்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை (06) பேலியகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


