Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பெரியநீலாவணையில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

பெரியநீலாவணையில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

அம்பாறை மாவட்டத்தில் பெரியநீலாவணை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை இடம்பெற்றுள்ளது.

பெரியநீலாவணை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments