வயநாடு புலி தாக்குதலில் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை பிரியங்கா இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
கடந்த வாரம் இங்குள்ள மானந்தவாடி கிராமத்தில் உள்ள பிரியதர்ஷினி தோட்டத்தில், காபி கொட்டைகள் சேகரிக்கச் சென்றபோது ராதா என்ற பெண்,புலி தாக்கி கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து வனத்துறை புலியை பிடிக்க முயற்சிகள் எல்லாம் வீணாகியது. அந்த புலி, ஓரு வீட்டிற்கு பின் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து,வயநாடு எம்.பி.யும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரியங்கா, கடந்த வாரம் புலி தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த ராதாவின் வீட்டிற்குச் சென்றார். அதை தொடர்ந்து குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
புலி தாக்கி கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் பிரியங்கா சந்திப்பு
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


