Thursday, November 21, 2024
spot_img
Homeகனடா செய்திகள்பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சபை தேர்தலில் கடும் போட்டி

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சபை தேர்தலில் கடும் போட்டி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சபை தேர்தலில் கடுமையான போட்டித் தன்மை நிலவே வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் என்.டி.பி. மற்றும் கொன்சர்வேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் கடுமையான போட்டித் தன்மை நிலவி வருகின்றது.

மாகாணத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு 47 ஆசனங்கள் தேவைப்படுகின்றன. வாக்கு என்னும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மாகாண சபை தேர்தலில் இறுதி முடிவுகள் முழுமையாக வெளியிடப்பட இன்னும் ஒரு வார காலம் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பகட்ட தேர்தல் வாக்கு என்னும் நிலவரங்களின் அடிப்படையில் என்.டி.பி. கட்சி 46 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதுடன் கன்சர்வேட்டிவ் கட்சி 45 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

இரண்டு தொகுதிகளில் வாக்கு என்னும் நடவடிக்கை மீள நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

தொகுதி ஒன்றில் இரண்டு கட்சிகளுக்கு இடையிலான வாக்கு எண்ணிக்கை 100 விட குறைவாக இருந்தால் இரண்டாம் தடவை வாக்குகள் எண்ணப்படும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments