Wednesday, March 18, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்பிரதமர் மோடியை சந்திக்கும் மெஸ்ஸி

பிரதமர் மோடியை சந்திக்கும் மெஸ்ஸி

கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி கடந்த (2022-ம் ஆண்டு) உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகின் சிறந்த வீரர் விருதை 8 முறை கைப்பற்றி சாதித்துள்ள 38 வயது முன்கள வீரரான மெஸ்சி ஒரு ஆண்டில் அதிக கோல்கள் (91), ஒரு கிளப் அணிக்காக அதிக கோல்கள் (பார்சிலோனா கிளப் அணிக்காக 672 கோல்) அடித்தது உள்பட பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார்.

தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களை சம்பாதித்து இருக்கும் மெஸ்சிக்கு இந்தியாவிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் , மெஸ்சி வருகிற டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார். அவர் கொல்கத்தா, மும்பை, டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது

மெஸ்சி வருகிற டிசம்பர் 12-ந் தேதி கொல்கத்தா வந்தடைகிறார். தொடர்ந்து பல்வேறு நிழச்சிகளில் பங்கேற்க உள்ள மெஸ்ஸி டிசம்பர் 12-ந் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் .

மெஸ்சி 2-வது முறையாக இந்தியா வருகிறார். அவர் முன்னதாக 2011-ம் ஆண்டு கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் நடந்த வெனிசுலாவுக்கு எதிரான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் பங்கேற்க வந்து இருந்தார். அப்போது அவரை காண ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் திரண்டது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments