Monday, March 16, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்பிச்சைக்காரன் - 3 படத்தை இயக்கி நடிக்கும் விஜய் ஆண்டனி!

பிச்சைக்காரன் – 3 படத்தை இயக்கி நடிக்கும் விஜய் ஆண்டனி!

நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் – 3 படத்தை இயக்கி நடிப்பதாக அறிவித்துள்ளார்.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி எடுத்தார். ஆனால், அப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

தற்போது, மார்கன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், பிச்சைக்காரன் படத்தின் 3-ஆம் பாகத்தை இயக்கி, நடிக்க உள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இப்படம் 2027 கோடை வெளியீடாகத் திரைக்கு வரும் என்பதையும் அறிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments