Wednesday, March 18, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பாகிஸ்தான்: 2025-26 நிதிநிலை அறிக்கைக்கு ரூ.4.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல்

பாகிஸ்தான்: 2025-26 நிதிநிலை அறிக்கைக்கு ரூ.4.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில்( அந்நாட்டின் 2025-26 நிதியாண்டிற்கான 4.2 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்குடன் கூடிய தேசிய வளர்ச்சி பட்ஜெட்டிற்கு, ரூ.4,224 பில்லியன்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.2 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தானின் தேசிய பொருளாதார கவுன்சில் கூட்டத்தில் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய நான்கு மாகாண முதல்-அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 2.7 சதவீதமாக உள்ளதாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பாகிஸ்தானுக்கான நீர் ஆதாரங்களை முடக்க நினைக்கும் இந்தியாவின் திட்டத்தை பாகிஸ்தான் முறியடிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி மற்றும் வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதில் விவசாயத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்ட ஷெபாஸ் ஷெரீப், விவசாய உற்பத்தியை மேம்படுத்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments