Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பட்டாசு சத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண் மீது தாக்குதல்!

பட்டாசு சத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண் மீது தாக்குதல்!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண் ஒருவர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்த மொரகஹஹேன பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் வல்மில்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நேற்று (17) ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொகரெல்ல – மெதலந்த சந்திக்கு அருகிலும் பெண் ஒருவர் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனிப்பட்ட தகராறு காரணமாக அந்தப் பெண்ணின் இரு மகன்கள் உள்ளிட்ட குழுவினரே இத்தாக்குதலை நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளைக் கோகரெல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளன

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments