யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் உடலானது நேற்றைய தினம் (22) கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
குறித்த விரிவுரையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது மகள் மற்றும் மருமகனால் படுகொலை செய்யப்பட்டு, தனங்கிளப்பு பகுதியில் வீசப்பட்டிருந்தார்.
கொலையின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் திருகோணமலை பகுதியில் தலைமறைவாகியிருந்தனர்.
விரிவுரையாளரின் மகனின் இடைவிடாத முயற்சியின் பலனாக, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், விரிவுரையாளரின் உடலையும் மீட்டனர். இந்நிலையில், உயிரிழந்த விரிவுரையாளரின் இறுதிச் சடங்குகள் நேற்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து உடல் கோம்பயன்மணல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி மரியாதைகள் செலுத்தப்பட்டன.


