14 ஆண்டுகளில் 10 திரைப்படங்கள்;
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் முதல் திரைப்படமான ‘பீட்சா’ வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள நன்றிப் பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான ‘பீட்சா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ், தனது திரைப்பயணத்தில் இதுவரை 10 திரைப்படங்களை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது நீண்டகால திரைப்பயணத்தில் உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள், பத்திரிகையாளர்கள், ஊடகத் துறையினர் மற்றும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
தனது 14 ஆண்டுகாலப் பயணத்தையும் 10 திரைப்படங்களையும் சாத்தியமாக்கிய அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துள்ள அவரது பதிவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.


