Saturday, October 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நுவரெலியாவில் கடும் மழை - போக்குவரத்துப் பாதிப்பு!

நுவரெலியாவில் கடும் மழை – போக்குவரத்துப் பாதிப்பு!

நுவரெலியாவில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல வீதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) பிற்பகல் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதி, நுவரெலியா – பதுளை வீதி, நுவரெலியா – ஹட்டன் வீதி மற்றும் நுவரெலியா நகரின் சில சிறு வீதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments