Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நுவரெலியாவில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல வியாபாரிகள் சிக்கினர்

நுவரெலியாவில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல வியாபாரிகள் சிக்கினர்

நுவரெலியா மாவட்டத்தில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு நாட்டு அரிசியை விற்பனை செய்த பல வியாபாரிகளுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க இன்று புதன்கிழமை (11) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அமில ரத்நாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா, நானுஓயா, ரதெல்ல மற்றும் அக்கரப்பத்தனை, ஹோல்புறுக் ஆகிய பகுதிகளில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வியாபாரிகளைக் கைது செய்வதற்காக இந்த அதிகாரிகள் இன்றைய தினம் (11) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நுவரெலியா மாவட்டம் முழுவதும் இவ்வாறான சோதனைகள் தொடரும் என தலைவர் அமில ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments