Thursday, March 19, 2026
spot_img
Homeகனடா செய்திகள்நீச்சல் தடாகங்கள் மூடப்பட்டமைக்கு மன்னிப்பு கோரிய நகர மேயர்

நீச்சல் தடாகங்கள் மூடப்பட்டமைக்கு மன்னிப்பு கோரிய நகர மேயர்

டொரண்டோ நகரத்தில் கடுமையான வெப்ப அலை நிலவி வரும் நிலையில், சில நீச்சல் தடாகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதற்கு மேயர் ஒலிவியா சோவ் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுபோன்றது மீண்டும் நடைபெறக்கூடாது. வெளியே வெப்பம் அதிகமாக இருக்கும் போது மக்கள் குளிக்க நீச்சல் தடாகங்களுக்கு செல்ல முடிய வேண்டும்,என அவர் திங்கள்கிழமை நகர சபையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, சில நீச்சல் தடாகங்கள் மூடப்பட்டன. இதற்குக் காரணமாக, வெப்பக் குறியீடு (humidex) 45°C-ஐ கடந்ததால் ஊழியர்கள் பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என நகர நிர்வாகம் தெரிவித்தது.

நீச்சல் தடாகங்கள் மூடப்பட்டமை குறித்து ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கடுமையான விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments