Thursday, March 19, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்நாளை தி.மு.க. செயற்குழு கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நாளை தி.மு.க. செயற்குழு கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளதையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாலும், 18-ம் தேதி தமிழகத்துக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாலும் அன்றைய தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதாக இருந்த தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நாளை ( 22-ம் தேதி) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டட தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் (22.12.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது சுலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தினை தவறாது கொண்டு வர வேண்டும். கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments