Friday, March 20, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் பிரதமர் மோடி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால், கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

அதேவேளை, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இரு அவைகளிலும் தலா 16 மணிநேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் மக்களவையில் உரையாற்றினர். எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய மந்திரிகள் பதில் அளித்தனர்.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று 2வது நாளாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது. இன்றைய விவாதத்தின்போது பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றுகிறார். முன்னதாக மதியம் 12 மணிமுதல் 1 மணிவரை உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றுகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments