Monday, March 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்துபாயில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த பெண் கைது

துபாயில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த பெண் கைது

துபாயில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்து இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பெண் வத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் துபாயில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி அம்பாறை, பதுளை மற்றும் பிபில உள்ள பல்வேறு பிரதேசங்களில் 37 நபர்களிடமிருந்து 02 கோடியே 12 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், சந்தேக நபரான பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments