Saturday, June 6, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்‘தலைவர் 173’ படத்தை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து!

‘தலைவர் 173’ படத்தை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைய உள்ளனர்.

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ படத்திற்காக இயக்குநர் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மிகவும் அதிகளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. இதையடுத்து இப்படத்தை டான் புகழ் சிபி.சக்கரவர்த்தி இயக்கப்போவதாக கூறப்பட்டது. அவரும் இந்த படத்தை விட்டு விலகினார்.

இந்த நிலையில் டிராகன் மற்றும் ஓ மை கடவுளே படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தலைவர் 173 படத்தை இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில், அவரின் புகைப்படத்த்துடன் கூடிய வாசகம் ஒன்றை ராஜ் கமல் ஃபில்ம்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த வாசகத்தில் கற்பனையில் இருந்து உத்வேகம் வரை என்று பதிவிட்டு இயக்குநர் அஸ்வத்திற்கு பிறந்தநாள் வாழ்துக்களை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments