Thursday, March 12, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜன.26-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 34 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து அந்நாட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் 19 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், படகு ஓட்டிய 3 மீனவர்களுக்கு தலா ரூ.60.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 16 பேருக்கு 6 மாதமும் 3 பேருக்கு ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 மீனவர்களின் படகு எண் தவறாக இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை பிப்.10-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக இலங்கை நீதிமன்றம் கூறியுள்ளது.

இதனிடையே விடுவிக்கப்பட்ட 19 மீனவர்களை தமிழகத்திற்கு அனுப்பும் பணியை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு தினங்களில் தமிழகம் திரும்புகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments